
மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் புதிய வகை கொரோனா திரிபுவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் தென் ஆப்ரிக்காவுடன் பயணத் தொடர்பு இல்லாத மருத்துவர் ஒருவரும் இருந்தார். இதற்கு அடுத்தபடியாக ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய 72 வயது நபருக்கும், நான்காவதாக தென் ஆப்ரிக்காவில் இருந்து மகாராஷ்டிராவின் டோம்பிவிலி திரும்பிய 33 வயது நபருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
ஐந்தாவதாக ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் இருந்து, டெல்லி திரும்பிய பயணி ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் ஒன்பது பேருக்கும், மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கும் ஒமைக்ரான் பரவியிருந்தது கண்டறியப்பட்டது.

இதனால், நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திங்கள்கிழமை வரை 21 ஆக இருந்தது. இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 37 வயது நபருக்கும், அவரது அமெரிக்க நண்பரான 36 வயது நபருக்கும் ஒமைக்ரான் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் மட்டும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆகவும், நாடு முழுவதும் 23 ஆகவும் அதிகரித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3pxgf9J
No comments:
Post a Comment