Showing posts with label Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News. Show all posts
Showing posts with label Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News. Show all posts

Monday, December 13, 2021

முதல்முறையாக ஒமைக்ரான் தொற்றுக்கு ஒருவர் பலி: பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், குறைந்தபட்சம் ஒருவராவது உயிரிழந்திருக்கக்கூடும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேற்கு லண்டனில் பாடிங்க்டன் என்ற இடத்தில் நடந்த தடுப்பூசி முகாமொன்றில் பேசிய அவர், “வருத்தமளிக்கும் விதமாக, ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் உள்ளதுதான். அதேபோல வேதனை தரும்வகையில், இதுவரை ஒமைக்ரான் உறுதியானவர்களில் குறைந்தது ஒருவராவது உயிரிழந்துள்ளார்.

எனக்கு தெரிந்து, இந்த ஒமைக்ரான் பாதிப்பு லேசான பதிப்பு என்றே நான் நினைக்கிறேன். இருப்பினும் இது வேகமாக பரவும் தன்மையுடன் உள்ளது என்பதையும் நாம் காண வேண்டும். இதன் பரவும் வேகத்தை நாம் இன்னும் சரியாக கணிக்க வேண்டியுள்ளது. ஆகவே இதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

image

பிரிட்டனில், நேற்று ஒருநாளிலேயே 1,239 பேர் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை பன்மடங்காகி வருகின்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை 3,137 பேர் பிரிட்டனில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ஒவ்வொரு நாளும் கொரோனா உறுதியாகும் நபர்களில், 40% பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என தரவுகள் சொல்கின்றன. கிறிஸ்துமஸ் நெருங்குவதால், கூட்டங்கள் அதிகம் கூடும் வாய்ப்புள்ளதால் வரும் நாள்களில் பிரிட்டனில் கட்டுப்பாடுகள் அதிகமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் பூஸ்டர் டோஸ் முன்பதிவு பிரிட்டனில் வரும் புதன்கிழமை (நாளை மறுநாள்) தொடங்குகிறது. இரு டோஸ் தடுப்பூசி பெற்று, மூன்று மாதம் ஆனவர்களுக்கு, இந்த பூஸ்டர் டோஸ் தரப்படும் என பிரதமர் ஜான்சன் அறிவித்துள்ளார்.

தகவல் உறுதுணை: SkyNews

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3ypx5v1

பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று

பாலிவுட் சினிமா நடிகை கரீனா கபூருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் அவரது தோழியும், சக நடிகையுமான அமிர்தா அரோராவுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பாலிவுட் சினிமா வட்டார பிரபலங்கள் ரன்பீர் கபூர், அமீர்கான், கத்ரீன் கைஃப், ஆலியா பாட், கார்த்திக் ஆர்யன் மாதிரியானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். 

image

இருப்பினும் கரீனா மற்றும் அமிர்தா தரப்பில் இருந்து இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை பெருநகரமும்பை மாநகராட்சி உறுதி செய்துள்ளது. 

image

மேலும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறி கேளிக்கை கொண்டாட்ட நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்றதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாமாக முன்வந்து RT-PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3oXZfuh

ஒமைக்ரான் தடுப்பு - பண்டிகை கால கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பண்டிகை கால கட்டுப்பாடுகள் குறித்தும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

குறிப்பாக, டிசம்பர் 15ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில், கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசிகள் இருப்பு, புதிய உருமாறிய ஓமைக்ரான் வைரஸ்  ஆகியவை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.

image

டிசம்பர் 31ம் தேதி பொதுமுடக்க நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வர உள்ளதால் கொண்டாட்டங்களை முழுமையாக தடை செய்வதா அல்லது ஒரு சில தளர்வுகளுடன் அனுமதி அளிப்பதா என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது

இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ள போதிலும், கடந்த சில நாட்களாக உலக நாடுகளை உருமாறிய கொரோனா ஓமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், ஓமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது, சர்வதேச விமான முனையத்திலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதேபோல், கல்லூரிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும், கொரோனா பரிசோதனையை அதிகரிப்பது தொடர்பாகவும், வரும் நாட்களில் பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது

image

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை உடனடியாக சேகரித்து பரிசோதிக்க வேண்டும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் வழங்குவதோடு, தடுப்பூசி குறைவாக செலுத்திய மாவட்டங்களில், விரைவாக தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, பொதுமக்களிடம் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைப்படிக்க...பூஜையுடன் தொடங்கிய வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படப்பிடிப்பு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/31KZ2lm

Sunday, December 12, 2021

"ஒமைக்ரான் வேகமாக பரவினாலும் பாதிப்புகள் குறைவே"- தென்னாப்ரிக்க மருத்துவர்கள்

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் அறிகுறிகள் குறைவாகவே இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 2 வார தனிமைப்படுத்தலில் குணமடைந்துவிடுவதாகவும் தென்னாப்ரிக்காவில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் புதிய அவதாரமான ஒமைக்ரான் திரிபு ‘அதிவேகமாக’ பரவும் என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறைவாகவே இருப்பதாக தென்னாப்ரிக்காவை சேர்ந்த அன்பன் பிள்ளை என்ற மருத்துவர்கள் சங்கத்தின் இயக்குநர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டியில், “டெல்டா வகை கொரோனாவை விட ஒமைக்ரான் வகை கொரோனா குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது. அவ்வகை தொற்றுள்ளவர்களுக்கும் பெரும்பாலானோர் 10 முதல் 14 நாட்கள் வரையிலான வீட்டு தனிமைப்படுத்தலிலேயே நோய் குணமடைந்து விடுகிறது” என்றுள்ளார்.

image

இவர் மட்டுமன்றி, ஒமைக்ரான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மற்ற மருத்துவர்களும் இதே போன்ற கருத்தையே தெரிவித்துள்ளனர். “எனினும் இது 2 வார கால புரிதல் மட்டுமே என்பதால், மக்கள் வழக்கமான முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று தென்னாப்ரிக்க மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி: ஆந்திராவில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3EOdHuh

ஆந்திராவில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி

ஆந்திர பிரதேசத்தில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அயர்லாந்திலிருந்து மும்பை வழியாக விசாகபட்டினம் வந்த 34 வயதான ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 27ஆம் தேதி ஆந்திராவுக்கு வந்த அந்த நபர் தற்போது தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வெளிநாடுகளிலிருந்து ஆந்திரா வந்தவர்களின் மாதிரிகள் மரபணு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஆந்திரா சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 7,774 பேருக்கு கொரோனா பாதிப்பு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/31VMc33

Saturday, December 11, 2021

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 7,774 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் புதிதாக 7,774 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
 
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, நாடு முழுவதும் இன்று புதிதாக 7,774 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,46,90,510 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,464 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,41,22,795 ஆக உயர்ந்துள்ளது.
 
அதே நேரத்தில் நாடு முழுவதும் 92,281 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 306 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 4,75,434 பேர் கொரோனாவுக்கு இந்தியாவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
 
image
மேலும் நாடு முழுவதும் நேற்று 89,56,784 பேருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு இருப்பதாகவும், இதுவரை மொத்தமாக 1,32,93,84,230 டோஸ்கள் செலுத்தப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.36 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.37 ஆகவும் உயர்ந்துள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3oLF6XU

“சென்னையில் 65% பேர் முகக்கவசம் அணிவதில்லை” - மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

டெல்டா வகை கொரோனாவின் தாக்கம் இதுவரை குறையாத நிலையில், சென்னையில் 65% பேர் மாஸ்க் அணிவதில்லை என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். ரஷ்யா, ஆஸ்திரியா, இஸ்ரேஸ், இங்கிலாந்து, ஜெர்மன் உள்ளிட்ட 50 நாடுகளில் ஓமைக்ரான் கொரோனா 50 வகையாக உருமாறி வருகிறது என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

1.08 கோடி பேர் இதுவரை முதல் தவணை தடுப்பூசியும்,94 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தவில்லை எனவும் கூறிய ராதாகிருஷ்ணன், பொது இடங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் எனவும் கூறினார்.

image

தமிழகத்தில் தினசரி 600 பேருக்கு கொரோனா தொற்று என்பதை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் இதுவரை ஓமைக்ரான் கொரோனா கண்டறியப்படவில்லை எனவும் கூறினார். சென்னையில் 65% பேர் முகக் கவசம் அணியவில்லை எனக் கூறிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இதுவரையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.101 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைப்படிக்க...உருமாறிய கொரோனா: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற ஆட்சியர்களுக்கு உத்தரவு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3dJ7zrk

Friday, December 10, 2021

ஒமைக்ரான்: மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை அமல்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை தடுக்கும் வகையில், 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் பரவிவரும் ஒமைக்ரான் வகை வைரஸின் பாதிப்பு இந்தியாவிலும் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் 25 பேருக்கு கண்டறியப்பட்டிருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஏற்கெனவே 10 பேரிடம் இந்த வகை வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 3 பேரிடமும், பிம்ப்ரி சிஞ்ச்வாட் நகரில் 4 பேரிடமும் தொற்று உறுதியாகியுள்ளது.

'ஒன்றிணைந்து நின்றால் உரிமைகளை வென்றெடுக்கலாம்' - பஞ்சாப்பில் சீமான் பேச்சு

இதனால், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் பரவலை தடுக்க மும்பையில் இரு தினங்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பேரணி, ஊர்வலம் மற்றும் மத வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3DKilIj

மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்கள் இன்று முதல் பொது இடங்களுக்குச் செல்ல தடை

மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்கள் இன்று முதல் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நியாய விலைக் கடை, வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், திருமண மண்டபம், வங்கிகள், சந்தைகள், மதுபானக் கடைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்வோர், கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசின் சார்பில் மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை உள்ளிட்ட 6 துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப்படிக்க...போயஸ் கார்டன் இல்லத்தின் எந்த அறையும் சீலிடப்படவில்லை - ஜெ.தீபா 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3ENnP6v

Thursday, December 9, 2021

”ஒமைக்ரான் பற்றிய அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம்”- உலக சுகாதார நிறுவனம் அச்சம்

ஒமைக்ரான் பற்றிய அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அந்த அமைப்பின் தடுப்பூசி துறைத் தலைவர் டாக்டர் கைத் ஓ பிரையன், ”கடந்த 2 மாதங்களாகத்தான் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி சீராக கிடைத்து வருகிறது. இப்படி அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும்.

ஆனால், ஒமைக்ரான் பற்றிய அச்சத்தால் தடுப்பூசி விநியோகம் மீண்டும் தடைபடுமோ என்ற அச்சம் மனதில் எழுகிறது. இந்தச் சூழலில் பணக்கார நாடுகள் தங்கள் தேவைக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை பதுக்கி வைக்கும் அபாயமும் உள்ளது. அப்படி நடந்தால் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காமல் அங்கு பரவல் அதிகரித்து, உருமாறிய வைரஸ்கள் தீவிரமாக உருவாக வழிவகுக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி: முடிவுக்கு வருகிறதா ‘கொரோனா’ பெருந்தொற்று? ஒமைக்ரான் திரிபு ஆய்வுகள் - விரிவான அலசல்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3GsGhSj

Wednesday, December 8, 2021

இந்தியா: 2-வது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 9,419 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இந்தியாவில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 159 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,74,111 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 94,742 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

image

நேற்று 8,251 பேர் கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,40,97,388 ஆக உள்ளது.

இதனைப்படிக்க...'பிபின் ராவத்தின் மறைவு பேரிழப்பு' - தமிழக தலைவர்கள் இரங்கல் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3pINCpR

Tuesday, December 7, 2021

டெல்டா திரிபைவிட ஒமைக்ரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை: உலக சுகாதார நிறுவனம்

ஒமைக்ரான் திரிபு கொரோனா, டெல்டா திரிபைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில் உலக சுகாதார இயக்குநர் மைக்கெல் ரியான், "ஏற்கெனவே போடப்படும் தடுப்பூசிகள் ஒமைக்ரானை கட்டுப்படுத்தாது என்பதற்கான அறிகுறியும் இதுவரை இல்லை. முதற்கட்ட ஆய்வுகளின் முடிவில் இவை தெரியவந்துள்ளது. வைரஸ் உருமாறியிருக்கும் நிலையில், நாம் ஏற்கெனவே கடைபிடித்து வரும் தனிமனித இடைவெளி, முகக்கவசம் போன்ற பாதுகாப்பு அம்சங்களை தொடர்வது அவசியம்” என்றுள்ளார்.

image

ஒமைக்ரான் வகை கொரோனா டெல்டாவை விட வீரியமிக்கது என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஃபாசியும் உறுதிசெய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி: மகாராஷ்டிரா: மேலும் இருவருக்கு ஒமைக்ரான் உறுதி; இந்தியாவில் மொத்த பாதிப்பு 23 ஆக உயர்வு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3y98XNk

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 8,439 பேருக்கு கொரோனா; 195 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 93,733 என்று, ஒரு லட்சத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இது கடந்த 555 நாள்களில் பதிவான மிக குறைவான எண்ணிக்கை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்த பாதிப்பாளர்களுடன் ஒப்பிடுகையில், சிகிச்சையிலிருப்போர் விகிதம் 1%-க்கும் குறைவாக, சரியாக 0.27% என்று பதிவாகியுள்ளது.

image

கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவால் இந்தியாவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,73,952 என்றாகியுள்ளது. இறந்தவர்கள் விகிதம் தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், குணமடைவோர் விகிதம் அதிகரித்தும் வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 98.36% என்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,525 என்று பதிவாகியுள்ளது. இதன்மூலம் கொரோனாவிலிருந்து இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,40,89,137 என்றாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி: ஆன்லைன் மூலம் கொரோனா இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3y3WR81

ஆன்லைன் மூலம் கொரோனா இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

(கோப்பு புகைப்படம்)

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், அரசின் இழப்பீட்டு தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 500 நாட்களுக்கும் மேல் கடந்து விட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விதிகளின் படி உரிய இழப்பீட்டை வழங்கக் கோரி வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் “தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்” என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் தமிழக அரசால் நிதியுதவி வழங்கப்படும் என்ற அரசாணையும் வெளியானது.
இந்த இழப்பீட்டை குடும்பத்தினர் மட்டும் வாரிசுதாரர் பெறுவதை எளிமையாக்கும் வகையில் www.tngov.in என்ற அரசின் இணையத்தில் what's new என்ற பகுதியில் Ex-gratia for COVID 19 என்ற லிங்கை தேர்வு இணைப்பை தேர்வு செய்தால், ஆன்லைன் மூலம் இழப்பீட்டுக்கான விண்ணப்பத்தை சம்ர்ப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3dtm6ar

Monday, December 6, 2021

இந்தியா: கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியமா? எட்டப்படாத இறுதி முடிவு

டெல்லியில் நடைபெற்ற தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு ஆலோசனையில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியமா என்பது குறித்தும், குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்தும் தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு ஆலோசனை மேற்கொண்டது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் கூடுதல் டோஸ் தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக எந்த இறுதி பரிந்துரையும் செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
 
image
அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கெனவே கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளன.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3lHNYvN

பொள்ளாச்சி: அரசுப் பள்ளியில் பயிலும் 2 மாணவிகள் உட்பட 3 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், இங்கு 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு தளர்வு காரணமாக, பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வரும் நிலையில், புரவிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 2ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

image

இதையடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில், பள்ளியில் ஏழாம் மற்றும் பத்தாம் வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என மூன்று பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சுகாதாரத்துறை சார்பில், பள்ளி வளாகம் வகுப்பறை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/31C6L4y

மகாராஷ்டிரா: மேலும் இருவருக்கு ஒமைக்ரான் உறுதி; இந்தியாவில் மொத்த பாதிப்பு 23 ஆக உயர்வு

மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் புதிய வகை கொரோனா திரிபுவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் தென் ஆப்ரிக்காவுடன் பயணத் தொடர்பு இல்லாத மருத்துவர் ஒருவரும் இருந்தார். இதற்கு அடுத்தபடியாக ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய 72 வயது நபருக்கும், நான்காவதாக தென் ஆப்ரிக்காவில் இருந்து மகாராஷ்டிராவின் டோம்பிவிலி திரும்பிய 33 வயது நபருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
ஐந்தாவதாக ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் இருந்து, டெல்லி திரும்பிய பயணி ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் ஒன்பது பேருக்கும், மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கும் ஒமைக்ரான் பரவியிருந்தது கண்டறியப்பட்டது.
 
image
இதனால், நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திங்கள்கிழமை வரை 21 ஆக இருந்தது. இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 37 வயது நபருக்கும், அவரது அமெரிக்க நண்பரான 36 வயது நபருக்கும் ஒமைக்ரான் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் மட்டும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆகவும், நாடு முழுவதும் 23 ஆகவும் அதிகரித்துள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3pxgf9J

Sunday, December 5, 2021

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று - இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் முதல் முதலாக கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் தென் ஆப்ரிக்காவுடன் பயணத் தொடர்பு இல்லாத மருத்துவர் ஒருவரும் இருந்தார். இதற்கு அடுத்தபடியாக சனிக்கிழமையன்று ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய 72 வயது நபருக்கும், நான்காவதாக தென் ஆப்ரிக்காவில் இருந்து மகாராஷ்டிராவுக்கு திரும்பிய 33 வயது நபருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.

image

அதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட்டதில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த பயணியை டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 9 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதன் மூலம் இந்தியா முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

இதனைப்படிக்க...“அதிமுக பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்ததில்லை” - துரை கருணா! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3EtvFly

Saturday, December 4, 2021

கொரோனா பரிசோதனை விதிகளுக்கு ஒத்துழைக்கவில்லையெனில் குற்றவியல் நடவடிக்கை: மருத்துவ செயலாளர்

கொரோனா பரிசோதனை செய்து கொண்டு காத்திருப்பதற்கோ , தனிமைப்படுத்திக் கொள்ளவதற்கோ ஒத்துழைக்கவில்லை என்றால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காத்திருப்பில் உள்ள பயணிகளுக்கு உணவுப் பொருட்களின் விலையை குறைக்கும்படி திட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். 

இதனைப்படிக்க...தமிழ்நாட்டில் மீண்டும் உயர்கிறதா கொரோனா தொற்று? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3DoXYjJ

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம்

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பொது சுகாதாரச் சட்டம், 1973 இன் பிரிவு 54ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என அவர் தெரிவித்துள்ளார்.

image

மீறுபவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீ ராமுலு உத்தரவிட்டுள்ளார்.

இதனைப்படிக்க...பெல்ஜியம்: இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3G9KIB6