
பாலிவுட் சினிமா நடிகை கரீனா கபூருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் அவரது தோழியும், சக நடிகையுமான அமிர்தா அரோராவுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பாலிவுட் சினிமா வட்டார பிரபலங்கள் ரன்பீர் கபூர், அமீர்கான், கத்ரீன் கைஃப், ஆலியா பாட், கார்த்திக் ஆர்யன் மாதிரியானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.

இருப்பினும் கரீனா மற்றும் அமிர்தா தரப்பில் இருந்து இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை பெருநகரமும்பை மாநகராட்சி உறுதி செய்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறி கேளிக்கை கொண்டாட்ட நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்றதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாமாக முன்வந்து RT-PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3oXZfuh
No comments:
Post a Comment