Monday, December 13, 2021

ஒமைக்ரான் தடுப்பு - பண்டிகை கால கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பண்டிகை கால கட்டுப்பாடுகள் குறித்தும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

குறிப்பாக, டிசம்பர் 15ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில், கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசிகள் இருப்பு, புதிய உருமாறிய ஓமைக்ரான் வைரஸ்  ஆகியவை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.

image

டிசம்பர் 31ம் தேதி பொதுமுடக்க நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வர உள்ளதால் கொண்டாட்டங்களை முழுமையாக தடை செய்வதா அல்லது ஒரு சில தளர்வுகளுடன் அனுமதி அளிப்பதா என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது

இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ள போதிலும், கடந்த சில நாட்களாக உலக நாடுகளை உருமாறிய கொரோனா ஓமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், ஓமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது, சர்வதேச விமான முனையத்திலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதேபோல், கல்லூரிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும், கொரோனா பரிசோதனையை அதிகரிப்பது தொடர்பாகவும், வரும் நாட்களில் பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது

image

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை உடனடியாக சேகரித்து பரிசோதிக்க வேண்டும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் வழங்குவதோடு, தடுப்பூசி குறைவாக செலுத்திய மாவட்டங்களில், விரைவாக தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, பொதுமக்களிடம் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைப்படிக்க...பூஜையுடன் தொடங்கிய வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படப்பிடிப்பு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/31KZ2lm

No comments:

Post a Comment