Thursday, December 2, 2021

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு நள்ளிரவு விமானத்தில் வந்த நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
 
தொற்றுக்கு ஆளான தஞ்சையைச் சேர்ந்த பயணிக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்றா என்பதை அறிய, மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு ஆளான விமானப் பயணிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் விமானப் பயணிகள் 477 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை. சிங்கப்பூரில் ஏற்கனவே ஒமைக்ரான் கொரோனா பரவியுள்ள நிலையில் அங்கிருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3oev2Xf

No comments:

Post a Comment